
சின்னத்திரையில் ஹீரோயினாகும் அபி நட்சத்திரா
அக் 20, 2024
Advertisement
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபி நட்சத்திரா. அயலி தொடரின் மூலம் புகழ் பெற்ற இவர் மூக்குத்தி அம்மன், நெஞ்சுக்கு நீதி, பீட்சா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கும் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் அபி நட்சத்திராவுக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பரத் நடிக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர்/நடிகைகள் மத்தியில் அபிநட்சத்திரா சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!