
மகன் மூலம் நிறைவேறிய சிரஞ்சீவியின் ஆசை
இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை மகன் மூலம் நிறைவேறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: சில படங்கள் தொடக்கத்திலிருந்தே சிறப்பானதாக அமையும். இதுவும் அப்படியான ஒன்று. ஷங்கருடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்து வந்தது. ராம் சரண் மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது. அவர்கள் படம் இன்று தொடங்கியுள்ளது. கியாரா அத்வானி, தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!