
பிஜூ மேனனுக்கு மஞ்சுவாரியரின் பிறந்தநாள் பரிசு
தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று தான் லலிதம் சுந்தரம். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை அவரின் தம்பி மது வாரியர் இயக்குகிறார். சொல்லப்போனால் தன் தம்பியை இயக்குனராக அறிமுகப்படுத்தவதற்காக இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார் மஞ்சுவாரியர்.
இன்று பிஜூமேனன் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் பரிசு தரும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மஞ்சு வாரியர். மேலும் விரைவில் பிஜூமேனனுடன் இணைந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். தொண்ணூறுகளின் இறுதியில் இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து இருந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!