
மலையாள இயக்குனர் கே.பி.பிள்ளை காலமானார்
கடந்த சில மாதங்களாக பல உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்த்தினார்கள். பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய ராணுவத்தின் விமானப் படையில் 21 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கலைத்துறைக்கு வந்தவர் கே.பி.பிள்ளை. ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தும், நாடகத்தை இயக்கியும் வந்தார். பிறகு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுடன் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி விட்டு சாகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாள சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!