
எப்போதும் உங்கள் ரசிகை : பிரித்விராஜுக்கு கனிகா புகழாரம்
இந்தநிலையில் தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கி வரும் "ப்ரோ டாடி" படத்தில் கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரித்விராஜின் இந்த வளர்ச்சி குறித்து கனிகா கூறும்போது, “பலவிதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்ததை பார்த்திருக்கிறேன். பல கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பால் உயிர் கொடுத்திருப்பதை பாராட்டி இருக்கிறேன்.. இதோ இப்போது முதன்முறையாக அவரது டைரக்சன் அவதாரத்தை நேரிலேயே பார்க்கும் வாய்ப்பும் மிகச்சிறந்த அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் எப்போதுமே அவருக்கும் அவரது வேலைசெய்யும் விதத்திற்கும் ரசிகையாகவே இருந்து வருகிறேன்” என புகழ்ந்து கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!