
இப்படி ஒரு கதையா? ஓடிடி-க்கு சென்சார் அவசியம்...
அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ள ஒரு திரைப்படம் "ஏக் மினி கதா" என்ற தெலுங்குப் படம். இப்படத்தின் கதை என்ன தெரியுமா ?, எழுதுவதற்கே கொஞ்சம் கூச்சமாக உள்ளது. படத்தின் கதாநாயகனுக்கு ஆணுறப்பு அளவு சிறியதாக இருக்கிறது. அதை பெரிதாக்கிக் கொள்ள அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தயாராகிறார். இப்படிப் போகிறது இப்படத்தின் கதை. இப்படத்தை "பேமிலி என்டர்டெயினர்" என்று வேறு டிரைலரில் விளம்பரப்படுத்துகிறார்கள்.
கார்த்திக் ரப்போலு இயக்கியுள்ள இப்படத்தின் கதையை "வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்" படத்திற்குக் கதை எழுதிய மெர்லபகா காந்தி எழுதியிருக்கிறார். சந்தோஷ் ஷேபான், காவ்யா தப்பார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மே 27ம் தேடி ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!