
மோசமான அதிகாரியாக பஹத் பாசில்
சில வருடங்களுக்கு முன்பு. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதில் வில்லத்தனம் கொண்ட மோசமான காட்டிலாகா அதிகாரியாக தான் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழர்கள், செம்மரக்கடத்தல் என்கிற சர்ச்சை பின்புலத்தில், கதை நகர்வதால் தான், இதில் நடிக்க விரும்பாமல் விஜய்சேதுபதி விலகி கொண்டதாகவும், பஹத் பாசில் மலையாளி என்பதால், அவரை வைத்து, இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொள்ளலாம் என்பதால் தான், அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!