
மகேஷ்பாபு பட துணை இயக்குனர் கொரோனாவால் மரணம்
இந்தநிலையில் அந்தப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த, 39 வயதே ஆன குமார் வட்டி என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று மரணத்தை தழுவியுள்ளார். இது மகேஷ்பாபு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பரசுராமிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய குமார் வட்டி, கடந்த 2017ல் "மா அப்பாயி" என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். தற்போது தனது குருநாதர் பரசுராம் இயக்கிவரும் மகேஷ்பாபுவின் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் குமார் வட்டி

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!