
மோகன்லால் இயக்கும் பாரோஸ் பூஜையுடன் துவங்கியது
இந்தநிலையில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோகன்லாலை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாசில், நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ், திலீப், இயக்குனர்கள் பிரியதர்ஷன், சத்யன் அந்திக்காடு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்து வைத்த சொத்துக்களை பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த வரலாற்று படத்தில் லிடியன் நாதஸ்வரம் என்கிற 13 வயது சிறுவனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார் மோகன்லால். நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!