
நீண்டநாள் கழித்து ஹவுஸ்புல் போர்டு : மம்முட்டி படம் கொடுத்த மகிழ்ச்சி
இதை தொடர்ந்து நேற்று முதல் படமாக மம்முட்டி நடித்த "தி பிரைஸ்ட்" என்கிற படம் தியேட்டர்களில் வெளியானது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து, தியேட்டர் அதிபர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கும் விதமாக பல இடங்களில் பல காட்சிகளுக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நிறைய பார்க்க முடிந்தது.
மர்ம த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முதன்முதலாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்பதும் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!