
புற்று நோய் பாதித்த ரசிகரை நேரில் சந்தித்து உதவிய பவன் கல்யாண்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலை புற்று நோயால் உயிருக்கு போராடி வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு 5லட்ச ரூபாயும், வெள்ளி விநாயகர் சிலையையும் வழங்கினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!