
இரவுக்காட்சிக்கு அனுமதி : மம்முட்டி பட ரிலீஸ் தேதி மாற்றம்
இந்த நிலையில் வரும் நாளை (மார்ச்-11) முதல் இரவு 9 மணி காட்சியையும் திரையிடலாம் என, கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் "தி பிரைஸ்ட்" என்கிற படம், நாளை (மார்ச்-11) ரிலீஸாகும் என உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த மார்ச்-4ஆம் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப்படம், திடீரென ரிலீஸ் தேதியை கேன்சல் செய்தது. அதற்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் யோசித்து வந்தநிலையில் தான், அரசின் நிபந்தனை தளர்வு அவர்களது முடிவை மாற்றிவிட்டது..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!