
கேரளாவில் நடந்த தாக்குதலால் கர்நாடகாவுக்கு இடம் மாறிய மின்னல் முரளி
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக கேரளாவில் காலடி என்கிற ஊரில் மிகப்பெரிய சர்ச் செட் ஒன்றை வடிவமைத்தனர். ஆனால் கொரோனா தாக்கம் நிலவிய சமயத்தில், அந்தப்பகுதியை சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்துக்களின் இடத்தில் இந்த சர்ச் செட் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அந்த சர்ச்சை இடித்து தள்ளினர். இந்தநிலையில் மீண்டும் மின்னல் முரளி படப்பிடிப்பை துவங்கியுள்ள படக்குழுவினர், தற்போது கர்நாடகாவுக்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனர். தற்போது அங்கே நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!