
படப்பிடிப்பில் பகத் பாசில் காயம்: மருத்துவமனையில் அனுமதி
தற்போது பகத் பாசில் சஜிமோன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே நடந்து வருகிறது. கதைப்படி பகத் பாசிலின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்குவது போன்றும், அந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்று அவர் உதவி கேட்பது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக நீர் நிரப்பிய பிரமாண்ட தொட்டிக்குள் வீடு செட்போட்டு படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சி படமானபோது வீட்டின் கூரை சரிந்து விழுந்தது. அதனுடன் பகத் பாசிலும் சேர்ந்து கீழே விழுந்தார். இதில் அவரது முகம், மூக்கு, கை கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!