
மலையாள சினிமாவில் த்ரிஷ்யம் 2 டிரைலர் புதிய சாதனை
மலையாளத்தில் இதுவரையில் வெளிவந்த டீசர்களில் 2018ல் வெளியிடப்பட்ட "ஒரு அடார் லவ்" டீசர் 2 கோடியே 97 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. டிரைலர்களில் 2019ல் வெளியிடப்பட்ட "லூசிபர்" டிரைலர் 1 கோடியே 17 லட்சம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தற்போது "த்ரிஷ்யம் 2" படத்தின் டிரைலர் 2 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. மலையாளத்தில் ஒரு திரைப்பட டிரைலர் 2 கோடி பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை.
பொதுவாகவே, அமேசான் ஓடிடி தளம் அவர்கள் தளத்தில் வெளியாகும் படங்களின் டிரைலர், டீசர்களை யு டியுபில் அதிக பார்வைகளைப் பெற வைக்கும். அது இந்தப் படத்திற்கும் நடந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!