
தனது 154வது பட இயக்குனரை அறிவித்தார் சிரஞ்சீவி
இன்னும் 152வது படம் முடிவடையாத நிலையில் 153வது படம் துவங்கப்படாத நிலையில் அவரது 154வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா (பாபி) என்பவர் இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. "உப்பென்னா" படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, மேடையில் தானாகவே இதனை அறிவித்த சிரஞ்சீவி, இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது என்பதையும் அறிவித்தார்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபல கதாசிரியராக விளங்குபவர் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா. கடந்த சில வருடங்களுக்கு முன் ரவிதேஜா நடித்த பவர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!