
ராவ் பகதூர் சாதாரண படம் அல்ல : ரிலீசுக்கு முன்பே மகேஷ்பாபு பாராட்டு
இந்த நிலையில் இளம் நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடித்துள்ள ராவ் பகதூர் என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.. இந்த படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் மகேஷ்பாபு, இது சாதாரண படம் அல்ல என்றும், படத்தின் தரம் மற்றும் கதைக்களம் தன்னை ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"இது உங்களை கதையோடும் காட்சிகளோடும் வலுவாகப் பிணைத்துக்கொள்ளும் ஒரு படம், படத்தின் தீவிரமும் சத்ய தேவின் நடிப்பும் நிச்சயம் உங்களை கவரும்" என்றும் பாராட்டியுள்ளார்.
இந்த படத்தில் சத்யதேவ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!