பவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் அவரது சகோதரியையும் விமர்சித்த காமெடி நடிகர் கைது
ஏப் 17, 2026
Advertisement
தெலுங்கில் சின்னத்திரையில் வளர்ந்து வரும் ஸ்டாண்ட் அப் காமெடியன் அனுதீப் கடிகலா. தற்போது சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர், நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண், ராம்சரண், சிரஞ்சீவியின் இன்னொரு சகோதரர் நாகபாபுவின் மகளான நிகாரிகா ஆகியோரை வைத்து சர்ச்சையான ஜோக்குகளை சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் இது குறித்து அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தான் பேசியதற்காக பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அனுதீப் கடிகலா.. ஆனாலும் பிரச்சனை இத்துடன் முடியவில்லை.. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இவர் மீது அளித்த புகாரின் பேரில் தற்போது அனுதீப் கடிகாலா கைது செய்யப்பட்டுள்ளார். தனது பெற்றோரை சந்திப்பதற்காக அவர் தனது சொந்த ஊரான பிராயக்ராஜ் சென்றிருந்தபோது போலீசார் அங்கே அவரை கைது செய்து ஐதராபாத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!