
மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல்
இது குறித்து அவர் கூறும்போது, “1994 ல் பிங்கமி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினேன். அதன்பிறகு நான் எழுதிய ஒரு கதையில் மோகன்லால் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அவர் பிஸியாக இருந்ததால் அவரை வைத்து அந்த படம் இயக்க முடியவில்லை. அதனால் அவர் மீது எனக்கு அப்போது ஒரு கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தில் தான் அடுத்த 12 வருடங்கள் அவருடன் இணைந்து நான் பணியாற்றவே இல்லை.
அதன் பிறகு 2006ல் ரசதந்திரம் படத்தில் தான் மீண்டும் நாங்கள் இணைந்தோம். ஆனால் அப்படி 12 வருடம் கழித்து அவர் என்னுடைய படத்தில் மீண்டும் நடிக்க வந்தபோது ஏதோ நேற்று தான் என் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி போனார், மறுநாள் நடிக்க வந்து விட்டார் என்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அதுதான் மோகன்லால். ஆனால் இப்படி அவர் மீது நான் கோபத்தில் இருந்தது இப்போது வரை கூட அவருக்கு தெரியாது. இந்த இடத்தில் தான் இதை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!