
நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "ஆக்ஷன் ஹீரோ பைஜூ" என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக நான் 1.90 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், டைரக்டர் எப்ரிட் ஷைனும் சேர்ந்து வேறு ஒருவருக்கு 5 கோடிக்கு விற்று விட்டனர். எனவே இது தொடர்பாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய தலயோலப்பரம்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
"தனக்கு எதிரான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும்" நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!