
மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி
இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் கொடுத்த அத்தனை பாலியல் புகார்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார் மினு முனீர். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் நான் அளித்த பாலியல் புகார்களை வாபஸ் பெறுகிறேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகார் வாபஸை போலீசார் ஏற்கவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு முறைப்படி எழுத்துபூர்வமாகத்தான் புகாரை வாபஸ் பெற முடியும். வாபஸ் வாங்குவதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை மினு முனீர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னுடைய உறவினரின் 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது... தான் புகார் அளித்த நடிகர்களின் திட்டமிட்ட சதி என்று கருதும் மினு முனீர், இனி அவர்களை எதிர்த்து போராட முடியாது என்பதாலேயே வாபஸ் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!