
சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்?
இவர்கள் மட்டுமல்ல இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என முக்கிய நட்சத்திரங்களும் மேலும் மலையாள திரையில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த 2008ல் இப்படி மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட அனைத்து மலையாள நட்சத்திரங்களும் இணைந்து நடித்த 20-20 என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு படமாக இது உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை தயாரிப்பது மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் இருவரும் தான். 20-20 படம் மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கு நிதி திரட்டும் விதமாக உருவானது. அதேபோல முழுக்க இல்லாவிட்டாலும் இந்த படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு மலையாள நடிகர் சங்கத்துக்கு வழங்கப்படும் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகை கலகலக்க செய்தது நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை. அதனால் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி நடிகர் சங்கத்தைச் சேர்ந்த மோகன்லால் உள்ளிட்ட அனைவருமே கூண்டோடு ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்த நிலையில் அந்த விஷயங்களை திசை திருப்பும் விதமாக தான் இப்படி ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்கள் என்ற பேச்சும் மலையாள திரையுலகில் நிலவுகிறது.
மேலும் இந்த படத்தில் பல மலையாள நட்சத்திரங்களையும் நடிக்க வைப்பதன் மூலம் இதுவரை எழுந்த சர்ச்சுகளை நீர்த்துப் போகச் செய்யவும் புதிய சர்ச்சைகள் எழாமல் இருக்கவும் இப்படி ஒரு படம் தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பெரும்பாலும் நடிகர்கள் பலர் தாங்களும் இடம் பெற வேண்டும் என நினைப்பதால் தொடர்ந்து பாலியல் புகார் சர்ச்சைகளை எழுப்ப மாட்டார்கள் என்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!