
கூட்டு பாலியலை பார்க்க வற்புறுத்தினார் : பாலச்சந்திர மேனன் மீது நடிகை புகார்
கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில் “கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் பாலச்சந்திர மேனன் இயக்கி நடித்த "தே இங்கோட்டு நோக்கியே" என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஓட்டல் அறைக்கு வரவழைத்தார். ஓட்டல் அறைக்கு சென்ற போது அவர் உடன் 3 இளம் பெண்கள் மற்றும் சில ஆண்களும் இருந்தனர். அப்போது என்னை அவர் கட்டாயப்படுத்தி குரூப் செக்ஸை பார்க்க சொன்னார். நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். வெளியே சொன்னால் படத்தில் நடித்துள்ள காட்சிகளை நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். அது தான் எனக்கு முதல் படம் என்பதாலும், எனக்கு வாய்ப்பு தந்தவர் என்பதாலும் நான் பயந்து இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. மேலும் சில படங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டதால் விரக்தியில் சினிமாவை விட்டு விலகி விட்டேன்” என்று அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
இதே நடிகை தான் முகேஷ், மணியன் பிள்ளை, ஜெயசூர்யா ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!