
நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு
கடைசியாக ஹிந்தியில் வெற்றி பெற்ற "ரைடு" படத்தை தெலுங்கில் "மிஸ்டர் பச்சான்" என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். இதனை ஹரிஷ் ஷங்கர் இயக்கிருந்தார். பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சுமார் ரூ. 80 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் திரையரங்குகளில் ரூ. 15 கோடி அளவில் தான் வசூலித்தது என கூறப்பட்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை சரி செய்யும் வகையில் ரவி தேஜா தான் இப்படத்திற்காக பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ. 4 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார். இவரை போலவே இயக்குனர் ஹரிஷ் ஷங்கரும் ரூ. 2 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!