
பழசிராஜா இயக்குனர் மீதான சர்மிளாவின் குற்றச்சாட்டு உண்மைதான் : உறுதி செய்த நடிகர்
அந்த வகையில் நடிகை சர்மிளாவும் இதேபோன்று கிட்டத்தட்ட 28 முறை பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி அதிலிருந்து தப்பித்த அனுபவங்கள் குறித்து கூறி அதிர்ச்சி அளித்தார். அதில் முக்கியமாக பிரபல மலையாள இயக்குனரும் பழசிராஜா படத்தை இயக்கியவருமான இயக்குனர் ஹரிஹரன் மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளார் சர்மிளா.
இது குறித்து அவர் கூறும்போது, “பரிணயம் என்கிற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது இயக்குனர் ஹரிஹரன் "அட்ஜஸ்ட்மென்ட்" செய்து கொள்ள சொல்லி அதில் நடித்த நடிகர் விஷ்ணு என்பவர் மூலமாக தன்னிடம் தூது அனுப்பியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட நடிகர் விஷ்ணு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது சர்மிளாவிடம் இயக்குனர் ஹரிஹரன் அவ்வாறு நடந்து கொண்டது உண்மைதான் என கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!