
மோகன்லாலுக்கு ரிலீப் கொடுத்த கமலின் ரீல் மகள்
இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றும் சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு கடின சூழலை எதிர்கொண்டு வரும் மோகன்லாலுக்கு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று மிகப்பெரிய ரிலாக்ஸ் ஆக அமைந்துள்ளது.
கடந்த 1987ல் மோகன்லால் நடிப்பில் இயக்குநர் கமல் இயக்கத்தில் வெளியான படம் "உன்னிகளே ஒரு கத பறயாம்". இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தில் நடித்த பங்கு பெற்ற அனைவரும் இதைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் மோகன்லாலும் பங்கேற்றார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகா, வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த படத்தில் நடித்தவர்களை தேடிக்கண்டுபிடித்து ஒருங்கிணைத்து இந்த மீள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.. இவர் நாயகன் படத்தில் கமலின் மகளாகவும் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜின் ஜோடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!