
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் டொவினோ தாமசின் 3டி படம்
கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜிதின் லால் கூறியதாவது: வெவ்வேறு தலைமுறைகளான மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் என ஒவ்வொருவரும் ஒரு முக்கிய நிலப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறார்கள். அவர்கள் தலைமுறை வழியில் எப்படியான போராட்டத்தை செய்கிறார்கள் என்பதுதான் கதை. பேண்டசி ஆக்ஷன் திரில்லராக படம் உருவாகி வருகிறது. டொவினோ தாமஸ் களரி கலைஞராகவும், திருடனாகவும் நடித்துள்ளார். சரித்திர காலம், நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடக்கிற கதை.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக இந்த படம் இருக்கும். கேரளாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!