
சேகர வர்ம ராஜாவு : மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நிவின் பாலி
அந்த வகையில் தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக சேகர வர்ம ராஜாவு என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு அவர் நடிக்கும் இரண்டாவது வரலாற்று படம் இது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சேகர வர்ம ராஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்த படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்குகிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!