
போலீஸ் வேலைக்கு செல்லும் நடிகை
இவரது தந்தை ரத்னாகர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியில் இருக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடிப்பை கைவிட்டு போலீஸ் வேலையில் சேர இருக்கிறார் அப்சார.
இதுகுறித்து அப்சரா கூறும்போது, “கலைத்துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்துவிட்டது. விரைவில் போலீஸ் துறையில் அலுவலக பணியில் சேர இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி.யில் சேர்ந்து இருந்தேன். அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருந்தது. கலைத்துறையில் கால் வைத்த பின்பு பழைய விருப்பங்களில் ஈடுபாடு குறைந்து விட்டது. ஆனாலும் நான் தற்போது சேர இருக்கும் புதிய பணியிலும் சாதிப்பேன். என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!