
நிகிலுடன் இணைந்த சாயி மஞ்ரேக்கர்
இதனை நடிகர் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது. ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். அனுபம் கெர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஹம்பியில் உள்ள விருப்பாக்ஷா கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
படம் குறித்து இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா கூறும்போது “காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் 1905 ஆண்டு காலகட்டத்திய கதையை கொண்ட படம். புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகிறது” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!