
சம்பளம் வேண்டாம் : துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு
சமீபத்தில் அவர் ஆந்திர மாநில தலைமைச் செயலகத்திற்கு சென்றபோது அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பவன் கல்யாண், 3 நாட்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு நான் வந்துள்ளேன். அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதோடு தற்போது ஆந்திரா மாநிலத்தில் நிதிநிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் எனக்கு சம்பளம் வாங்கவே மனமில்லை. இனிமேல் சம்பளம் வாங்காமலேயே துணை முதலமைச்சராக பணியாற்ற போகிறேன் என்றும் கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.
இவரது இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!