
மெகா - பவர் சகோதரர்களுக்கு ஒன்றாக வாழ்த்து சொன்ன த்ரிஷா
கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ள திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒரு சிறிய பூந்தொட்டியை பரிசளித்து உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிஷா. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!