
திலீப் நடிக்கும் புதிய காமெடி படம் பவி கேர்டேக்கர்
இப்படி சமீபகாலமாக சீரியஸான படங்களில் நடித்து வந்த திலீப் மீண்டும் தனது வழக்கமான காமெடி பாணிக்கு திரும்பியுள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு பவி கேர்டேக்கர் என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது திலீப்பின் 149வது படம் ஆகும். முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை, நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வினீத் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த ஆயாள் நானல்ல என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!