
பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை வில்லனும் இல்லை : மம்முட்டி
ராகுல் சதாசிவன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய மம்முட்டி, “பிரம்மயுகம் படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. எல்லாமே கதாபாத்திரங்கள் தான். அவர்களின் குணாதிசயங்கள் தான் ரசிகர்களின் பார்வையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பதை தீர்மானிக்கும். இந்த படம் குறித்து எந்தவித முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படம் இப்படித்தான் நகரும் என்கிற யூகங்கள் எதுவும் இல்லாமல் படம் பார்க்க அமர்ந்தால் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!