
போலீஸ் தேர்வில் பிட் அடித்த பிஜுமேனன்
இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிஜுமேனன். சாதாரண அதிகாரியாக இருந்து உயர் அதிகாரி ஆவதற்காக அவர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் பலமுறை அவர் தோல்வியை தழுவுகிறார். வேறு ஒரு போலீஸ் அதிகாரி கொடுத்த ஆலோசனையின்படி போலீஸ் தேர்வில் பிட் (அதுதான் மலையாளத்தில் துண்டு) அடிக்க தயாராகிறார். மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தாரா, இல்லை சிக்கிக் கொண்டாரா என்பதை மையப்படுத்தி இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. இதை சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரியாஸ் செரீப் என்பவர் இயக்கி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!