
பாதி தலைமுடி, மீசை தாடியுடன் இரண்டு மாதங்கள் கெட்டப்பை கட்டி காத்த மோகன்லால் பட வில்லன்
கதைப்படி படத்தில் இவர் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கொடுக்கப்பட்ட தண்டனையாக இந்த கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை இதே போன்ற தோற்றத்தை ரொம்பவே கஷ்டப்பட்டு கட்டிக் காத்துள்ளார் தனிஷ் சேட். பொதுவாக பல நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியை வளர்த்து, அடர்த்தியான தாடியை வளர்ப்பார்கள். அவ்வளவு ஏன் மொட்டை கூட அடிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு கெட்டப்பில் இரண்டு மாதம் இவர் கஷ்டப்பட்டு தன்னை மறைத்துக் கொண்டு உலா வந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமான விஷயம் தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!