
மோகன்லால் படத்திற்கு யோகிபாபு வாழ்த்து
யோகி பாபுவும் தற்போது மலையாளத்தில் நுழைந்து "குருவாயூர் அம்பலநடையில்" என்கிற படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்து வருகிறார். மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கும் யோகிபாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யோகிபாபு.
மலைக்கோட்டை வாலிபன் பட போஸ்டர் அருகில் மோகன்லால் நிற்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டு வெளியிட்டுள்ள பதிவில் "மலைக்கோட்டை வாலிபன் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது, ஆல் தி பெஸ்ட் மோகன்லால் சார்.. வாழ்த்துக்கள் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.. இந்த அற்புதமான திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். மலைக்கோட்டை வாலிபன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார் யோகிபாபு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!