
மலைக்கோட்டை வாலிபன் எனக்காக உருவான கதையல்ல: மோகன்லால்
படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மோகன்லால் பேசியதாவது: மலைக்கோட்டை வாலிபன் பிரமாண்டமான படமாக இருக்கும். இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இப்படத்தின் கதை எனக்காகவே எழுதப்பட்டதல்ல. நானும், இயக்குநர் லிஜோவும் பல கதைகள் குறித்து விவாதித்தோம். அதில் நான் இந்தக் கதையை தேர்வு செய்தேன். எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். அதுதான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது. சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வருட உழைப்பை கொடுத்து உருவாக்கி உள்ளோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!