
பிரதமருக்கு அவதூறு : மாலத்தீவு பயணத்தை ரத்து செய்த நாகார்ஜுனா
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பிக்பாஸ் மற்றும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்ல இருந்தேன். தற்போது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதை செய்யவில்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பின் விளைவுகளை மாலத்தீவு சந்தித்து வருகிறது. இதனாலேயே நானும் பயணத்தை ரத்து செய்தேன். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்ல இருக்கிறேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!