
ஆடுஜீவிதம் இயக்குனருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் மோகன்லால்
இதுகுறித்து இந்த படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர் பி.கே சஜீவ் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இயக்குனர் பிளஸ்சி, மோகன்லாலை வைத்து தன்மாத்ரா, பிரம்மராம் மற்றும் பிரணயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தன்மாத்ரா படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தான் இந்த இருவரும் மீண்டும் நான்காவது முறையாக ஒரு படத்திற்கு இணைய இருக்கிறார்கள் என்கிற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!