
60 நாளில் முடிந்த மம்முட்டி படம்
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஒட்டபாலத்தில் தொடங்கியது. அதன் பிறகு கொச்சி, அயிரப்பள்ளியில் நடந்தது. நேற்று இதன் படப்பிடிப்புகள் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு படப்பிடிப்பை முடித்து விட்டு இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது. "பிரமயுகம்" மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான "கண்ணூர் ஸ்காவ்ட்" படம் வெற்றி பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!