
மரகதமணியின் மகனா இவர்? - ஆச்சரியப்பட்ட சிரஞ்சீவி
தற்போது இந்த சகோதரர்களின் கூட்டணியில் "பாக் சாலே" என்கிற படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரனீத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
மேலும், “ஸ்ரீ சிம்ஹா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகும் வரை அவர் மரகதமணியின் மகன் என்பதே எனக்கு தெரியாது.. அந்த அளவிற்கு தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதை வெளிப்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் முன்னேறி வருகிறார். அவரது சகோதரர் காலபைரவாவும் இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!