
வரலாற்று படத்தில் டொவினோ தாமஸ்: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
சமீபத்தில் வெளியான இதன் டீசர் கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் கேரளாவில் வாழ்ந்த பிரபல திருடனின் கதை. கோயில்களில் மட்டும் திருடுவது அவனது பாணி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. காந்தாரா போன்று ஆன்மிகமும், சமூகமும் கலந்த படமாக உருவாகி உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. டொவினோ தாமஸ் நடித்த "2018" படம் தற்போது 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!