
கைவிட்ட பவன் கல்யாண் ? : விரக்தியில் வீரமல்லு இயக்குனர்
அந்த வகையில் இந்த படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வக்கீல் சாப், பீம்லா நாயக் ஆகிய படங்கள் கடந்த இரண்டு வருடங்களில் அடுத்தடுத்து வெளியாகி விட்டன. இதைத்தொடர்ந்து இந்த வருடம் துவங்கப்பட்ட சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் பட ரீமேக்கையும் பவன் கல்யாண் முடித்துவிட்டார். இன்னொரு பக்கம் சுஜித் இயக்கத்தில் உருவாகி வரும் ஓ ஜி மற்றும் ஹரிஷ்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் உஸ்தாத் பகத்சிங் ஆகிய படங்களுக்கு மாறி மாறி கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
ஆனால் ஹரிஹர வீரமல்லு படத்தின் பக்கம் மட்டும் கவனத்தைத் திருப்ப மறுக்கிறாராம் பவன் கல்யாண். இந்த படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஏ.எம் ரத்னம் தயாரித்து வருகிறார். இந்த படம் மேற்கொண்டு வளருமா என்கிற சந்தேக சூழல் நிழவுவதால் விரக்தியில் இருக்கிறாராம் இந்த படத்தில் இயக்குனர் கிரிஷ் ஜஹர்லமுடி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!