
‛ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் அதிர்ச்சியில் ராவணாசுரா படக்குழு
இந்த படம் வரும் ஏப்-7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் கிரிமினல் லாயராக நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார் ரவிதேஜா. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் ஜெயராம் பேசுகின்ற “இவன் கிரிமினல் லாயர் அல்ல.. லா தெரிஞ்ச கிரிமினல்” என்கிற வசனத்துக்கு ஏற்ப ரவி தேஜாவின் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் என இரண்டும் கலந்த அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு தற்போது "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் யு/ஏ சான்றிதழை தான் அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் படத்தில் அதிகம் வன்முறை காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் இடம்பெற்று இருப்பதால் இந்த படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரவிதேஜா படத்திற்கு குழந்தைகளும் ரசிகர்கள் என்பதால் இந்த படத்திற்கு குடும்பத்தினர் குழந்தைகளையும் அழைத்து வந்து படம் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!