
இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்
இந்த நிலையில் தற்போது இரட்ட என்கிற படத்தில் டைட்டிலுக்கு ஏற்றபடி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். ஒரு குணச்சித்திர நடிகர் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடிப்பது இதுவே மலையாள சினிமாவில் முதல் முறை என்கிறார்கள். இந்த படத்தை துல்கர் சல்மான் நடித்த சார்லி படத்தை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தயாரிக்கிறார். ரோஹித் கிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இரண்டு வித கெட்டப்புகளில் ஜோஜு ஜார்ஜ் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!