
ஒரு கப் காபி : விஜய்யை புகழ்ந்து தெலுங்கு திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்திய தில் ராஜு
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜு, இதுவரை நான் தெலுங்கில் பல ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒரு கப் காபி கொடுத்தது கிடையாது. ஆனால் விஜய்யை சந்திக்க சென்றபோது அவர் தனது கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வந்து அதில் எனக்கு ஒன்றை தந்து உபசரித்தார். அதனால் தான் அவர் சினிமாவிலும் சினிமாவை தாண்டியும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார். இவர் விஜய்யை உயர்த்தி பேசுவதற்காக ஒரு மிகப்பெரிய விழா மேடையில் இப்படி தெலுங்கு நடிகர்களை குறை சொல்லி இருப்பது மீண்டும் தெலுங்கு திரை உலகை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!