
திலீப்-தமன்னா படத்தின் டைட்டில் பாந்த்ரா
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஈஸ்வரி ராவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திலீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திற்குப் "பாந்த்ரா" என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் மும்பை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் பாணியிலான படமாக தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!