
ஈஷா யோகா மையத்தில் காந்தாரா
இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் பேரில் "காந்தாரா" திரையிடப்பட்டது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட பதிவில் "கந்தாரா திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி"" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா ஈஷாவில் திரையிடப்படும் இரண்டாவது படம். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு கங்கனா நடித்திருந்த மணிகர்னிகா படம் திரையிடப்பட்டது. இந்த படம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை கதை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!