
புனித் ராஜ்குமார் படத்திற்கு வரிவிலக்கு: கர்நாடக அரசு அறிவிப்பு
இந்த படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) இன்னும் வாழ்ந்து வருகிறார். அறிவுக்கூர்மையான ஆளுமையுடன் ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் "கந்ததகுடிக் ஒரு சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கந்ததகுடி படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: புனித் ராஜ்குமார் நம்மைவிட்டு சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். அவர் நம்முடன்தான் இருக்கிறார். புனித் ராஜ்குமார் நடித்துள்ள கந்ததகுடி கன்னட நாட்டின் கலை மற்றும் இயற்கைக்குப் பெருமை சேர்ப்பதாகவும், வனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு வசதியாக படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். என்றார்.
முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து கர்நாடக மாநில அரசு முறைப்படி வரிவிலக்கு அறிவித்து அரசாணை வெளியிட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!